புதிய வீடு அல்லது கட்டிடம் கட்டத் தொடங்கும் முன், நிலத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, இறைவனின் அருளைப் பெறச் செய்யப்படும் மிக முக்கியமான சடங்கு பூமி பூஜை (Bhumi Puja).
நீங்கள் பூமி பூஜை செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், பூஜைக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து வைப்பது பூஜையை தடங்கலின்றி சிறப்பாக நடத்த உதவும்
🌺 பூமி பூஜை பொருட்களின் பட்டியல்
1. பூஜை மற்றும் மங்கலப் பொருட்கள்
மஞ்சள்: 100 கிராம்
குங்குமம்: 1 பாக்கெட்
சந்தனம்: 1 பாக்கெட்
விபூதி: 1 பாக்கெட்
ஊதுபத்தி: 1 பாக்கெட்
சாம்பிராணி கோப்பைகள்: 1 பாக்கெட்
கற்பூரம்: 1 பாக்கெட்
விளக்கு திரி: 1 பாக்கெட்
நல்லெண்ணெய் / நெய்: 1 பாக்கெட்
தீப்பெட்டி: 1 பாக்கெட்
2. மலர்கள், நவதானியம் மற்றும் நிவேதனப் பொருட்கள்
வெற்றிலை, பாக்கு: ₹20 அளவிற்கு
வாழைப்பழம்: 1 சீப்பு
தேங்காய்: 3 அல்லது 5
எலுமிச்சை பழம்: 4
வாழை இலை: 2
உதிரிப்பூக்கள்: 100 கிராம்
மல்லிகைப் பூ / கதம்பம் / மாலை: 10 முழம் அல்லது 1 ஜோடி
நவதானியம்: 200 கிராம்
அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை: தேவையான அளவு
ஐந்து வகை பழங்கள்: தேவையான அளவு
3. கட்டுமானப் பொருட்கள் & விருந்தினர் உபசரிப்பு
செங்கல்: 12
மணல்: 3 மூட்டை
சாக்லேட் / இனிப்பு / காரம்: தேவையான அளவு
டிஷ்யூ பேப்பர் (Tissue Paper): தேவையான அளவு
பேப்பர் தட்டு: தேவையான அளவு
4. வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டிய பொருட்கள்
பூஜை நடைபெறும் இடத்திற்குச் செல்லும் முன், உங்கள் வீட்டில் இருந்து தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்:
அகல் விளக்கு / குத்து விளக்கு: 3 அல்லது 5
சந்தனக் கிண்ணம்: 5
பித்தளை சொம்பு: 1
ஆரத்தி தட்டு: 1
குலதெய்வம் கோவில் தீர்த்தம்: தேவையான அளவு
மா இலை: தேவையான அளவு
அருகம்புல்: தேவையான அளவு
கோலமாவு: தேவையான அளவு
நிறைகுட தண்ணீர்: 1 அல்லது 3 குடம்
பால்: 1 லிட்டர்
பால கொம்பு
ஒரு ரூபாய் நாணயங்கள்: தேவையான அளவு
குடிநீர் & டம்ளர்
கை துடைக்க பழைய துணி
கத்தி: 1
அரிவாள்: 1
💡 முக்கியக் குறிப்புகள்:
பூஜைக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இனிப்பு, காரம் மற்றும் தட்டுகளின் அளவுகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம்
. உங்களிடம் ஏற்கனவே வாஸ்து கோவில் செங்கல் இருந்தால், பூஜையின் போது மறக்காமல் எடுத்து வரவும்
.
உங்கள் புதிய வீடு மற்றும் கட்டிடப் பணிகள் அனைத்தும் தெய்வ அருளோடு தடங்கலின்றி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
#CivilEngineering #StructuralEngineering #CivilEngineers #BuildingConstruction #HouseConstruction #ConstructionTips #HomeDesign #Architecture #EngineeringLife #BornToBuild #CivilEngineeringTips #RoomSizes #FloorPlanDesign #HousePlanning #ResidentialDesign #LivingRoomDesign #BedroomDimensions #HomeLayout #ArchitecturalDrawing #VastuShastra #VastuTips #VastuForHome #HappyHomeVastu #WaterTankVastu #StaircaseVastu #HomePositivity #IndianArchitectureVastu #ElectricalWiring #HouseWiring #ElectricalSafety #WireSizesChart #HomeElectrical #FireSafetyTips #ElectricalEngineering #CopperWire #ReadingDrawings #StructuralDrawing #BlueprintReading #EngineeringBlueprints #RebarNotation #GridLines #SiteEngineerTips #CivilEngineeringStudent #SepticTankDesign #WasteWaterManagement #PlumbingEngineering #SanitaryEngineering #SepticTankSize #HomeSanitation #CivilDetails
#ContractGuidelines #BuildingOwnerGuide #ConstructionLaw #EngineeringAssociation #ConstructionAgreement #BuildingContract #ConstructionGuide #CivilEngineering #BuildersAndOwners #RealEstateAgreement #PudukkottaiBuilders #TamilConstruction #CivilEngineersTamilNadu #Pudukkottai



No comments:
Post a Comment